ADDED : பிப் 12, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொறுபேற்றுக்கொண்டார்.
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும், கூடுதல் கலெக்டராகவும் இருந்த ஸ்வேதா சுமன், நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றார்.
அவரது பணிகளை, கோவை மகளிர் திட்டம், திட்ட இயக்குனர் மதுரா கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இச்சூழலில், புதியதாக கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த்வாகே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலுள்ள, அனைத்துப்பணியாளர்களும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.