/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
/
ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
ADDED : ஆக 29, 2025 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மூன்று ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளன.
ஆலப்புழா-சென்னை ரயிலில் நவ. 1 வரை, கூடுதலாக 2ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.
சென்னை-திருவனந்தபுரம் ரயிலில், நவ. 3 வரை கூடுதலாக 2ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது. கோவை-ராமேஸ்வரம் ரயிலில் அக். 29 வரை, ஒரு ஸ்லீப்பர் கோச் இணைக்கப்படுகிறது.
இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.