/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாற்றுப் பண்ணையில் கூடுதல் இயக்குனர் ஆய்வு
/
நாற்றுப் பண்ணையில் கூடுதல் இயக்குனர் ஆய்வு
ADDED : ஆக 03, 2025 09:23 PM
அன்னுார்; அன்னுார் அருகே நாற்றுப் பண்ணையில், கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.
ஊரக வளர்ச்சி துறை சார்பில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பண்ணைகளில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, அனைத்து ஊராட்சிகளுக்கும், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. வடவள்ளி ஊராட்சி, பெரிய புத்தூரில், 20,000 மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சி துறை மாநில கூடுதல் இயக்குனர் சுமதி நாற்றுப் பண்ணையில் ஆய்வு செய்தார்.
என்னென்ன வகை நாற்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. தரமாக உள்ளனவா, மற்ற ஊராட்சிகளுக்கு முறையாக வழங்கப்படுகின்றனவா என விசாரித்தார். நர்சரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். ஒன்றியம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணியை வேப்படுத்த அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கமலக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.