/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளுக்கு கூடுதல் வேப்பம் புண்ணாக்கு வினியோகம்
/
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளுக்கு கூடுதல் வேப்பம் புண்ணாக்கு வினியோகம்
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளுக்கு கூடுதல் வேப்பம் புண்ணாக்கு வினியோகம்
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளுக்கு கூடுதல் வேப்பம் புண்ணாக்கு வினியோகம்
ADDED : செப் 24, 2024 11:45 PM
பொள்ளாச்சி : 'தென்னை வாடல் நோயை கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் வேப்பம் புண்ணாக்கு, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளுக்கு, கூடுதலாக அனுப்பப்பட்டு வருகிறது' என, துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 30ம் தேதி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற பொள்ளாச்சி சுற்றுவட்டார விவசாயிகள், 'பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், தென்னை வாடல் நோய் பாதிப்பு இருக்கிறது' என்று தெரிவித்தனர். வேளாண் பல்கலைக்கழக தென்னை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், 'வேப்பம் புண்ணாக்கு தான், இதற்கு மருந்து' என தெரிவித்தனர்.
'துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில், தரமான, எண்ணெய் எடுக்காத வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கப்படும் நிலையில், பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் எளிதாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று, விவசாயிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் உள்ள, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், வேப்பம் புண்ணாக்கு இயற்கை உரத்தை, இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அறிவுறுத்தலின் பேரில், குறிப்பிட்ட பகுதிகளுக்கு, ஏற்கனவே வேப்பம் புண்ணாக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கூடுதலாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபன அதிகாரிகள் தெரிவித்தனர்.