நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவராக தங்கவேல் பணியாற்றி வருகிறார்.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் பணியிடம் காலியாக இருப்பதால், கோவை ஆணைய தலைவர் தங்கவேலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை நுகர்வோர் ஆணையத்தில், திங்கள் முதல் வியாழன் வரையும், நீலகிரி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்துவார்.