ADDED : ஜூலை 04, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
கோவை: பாரதியார் பல்கலையின் பல்வேறு துறைகள், பல்கலையின் அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் முழு நேர, பகுதி நேர பி.எச்டி., படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடந்த ஜூன் 10 முதல் 29ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. விண்ணப்ப பதிவு முடிந்த நிலையில், வரும் 9ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. www.b-u.ac.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
