/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதிபராசக்தி சித்தர் பீடம் கும்பாபிஷேக விழா
/
ஆதிபராசக்தி சித்தர் பீடம் கும்பாபிஷேக விழா
ADDED : மார் 30, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார்-தென்னம்பாளையம் சாலையில், 50 ஆண்டுகளாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இங்கு பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன.
இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும் 7ம் தேதி துவங்குகிறது. 7ம் தேதி காலை 6:45 மணிக்கு குருபூஜை நடைபெறுகிறது. மதியம் 12:15 மணிக்கு கோபுர கலசங்கள் நிறுவப்படுகின்றன.
வரும் 8ம் தேதி காலை 8:45 மணிக்கு சக்தி கொடியேற்றப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு எண் வகை மருந்து சாத்தப்படுகிறது. 9ம் தேதி காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் மஹா அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை செவ்வாடை பக்தர்கள் செய்து வருகின்றனர்.