/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் 9ம் தேதி கும்பாபிஷேகம்
/
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் 9ம் தேதி கும்பாபிஷேகம்
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் 9ம் தேதி கும்பாபிஷேகம்
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் 9ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 07, 2025 05:10 AM

மேட்டுப்பாளையம்; காரமடை ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம், கும்பாபிேஷகம் 9ம் தேதி நடைபெற உள்ளது.
காரமடை கன்னார்பாளையம் சாலையில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இக்கோவில், 2003ம் ஆண்டு புதிதாக கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
22 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை குருபூஜையுடன் துவங்குகிறது. மாலை, 3:00 மணிக்கு கோபுர கலசம் அமைக்கப்பட உள்ளது.
8ம் தேதி காலை, 8:15 மணிக்கு சக்தி கொடி ஏற்றுதலும், 10:45 மணிக்கு முதல் கால வேள்வி பூஜையும், 7:05 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி பூஜையும், இரவு, 10:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட உள்ளது.
9ம் தேதி காலை, 5:00 மூன்றாம் கால வேள்வி பூஜை நடைபெற உள்ளது. 7:00 லிருந்து, 7:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து அன்னதானமும் மாலை 3:00 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை காரமடை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

