/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதிபராசக்தி கோவில் திருவிழா; பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்
/
ஆதிபராசக்தி கோவில் திருவிழா; பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்
ஆதிபராசக்தி கோவில் திருவிழா; பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்
ஆதிபராசக்தி கோவில் திருவிழா; பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்
ADDED : மே 02, 2025 08:38 PM

வால்பாறை; வால்பாறை, சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலின், 19ம் ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில், தினமும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
நேற்று, காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடந்தது. அதனை தொடர்ந்து, அம்மனுக்கு பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்களால் அம்மனுக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலிலிருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
இன்று, 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து பக்தர்கள் அலகு பூட்டியும், பூவோடு எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். 4ம் தேதி காலை, 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.