/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிஷியா ஈக்கோ வேலி மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா -
/
அடிஷியா ஈக்கோ வேலி மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா -
அடிஷியா ஈக்கோ வேலி மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா -
அடிஷியா ஈக்கோ வேலி மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா -
ADDED : ஜூலை 20, 2025 10:56 PM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில், 'அடிஷியா ஈகோ வேலி' எனும் புதிய மனை பிரிவுகள் விற்பனை திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
149 வீட்டுமனைகள், அனைத்து வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஈக்கோ வேலி வீட்டுமனை விற்பனையை, அடிஷியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், ''அடிஷியா ஈக்கோ வேலி என்பது, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் பாதுகாப்பை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட மனை பிரிவு. இப்பிரிவில் மனை வாங்குபவர்களுக்கு சாலைகள், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. துவக்க விழாவையொட்டி, முதல் வாரத்தில் மனைகள் வாங்குவோருக்கு, பத்திரப்பதிவு இலவசமாக செய்து தரப்படும்,'' என்றார்.