/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதித்யா சர்வதேச பள்ளி ஆண்டு விழா கோலாகலம்
/
ஆதித்யா சர்வதேச பள்ளி ஆண்டு விழா கோலாகலம்
ADDED : டிச 25, 2024 08:20 PM

கோவை; ஆதித்யா சர்வதேசப் பள்ளியின், 11வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக, உடல் மற்றும் முக சீரமைப்பு மருத்துவர் ஜெயா மகேஷ் பங்கேற்று, மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை, மாணவர்கள் அரங்கேற்றினர். போட்டிகளில்  முதலிடம் வகித்த மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
பள்ளித் தலைவர் சுகுமாறன், தாளாளர் கீர்த்தனாஸ்ரீ விஜய், நிர்வாக அறங்காவலர் விஜய், முதல்வர் அத்யா பர்வின் பாபி மற்றும் ஆதித்யா குளோபல் பள்ளியின் தாளாளர் பிரவீன் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர் ஜெயா மகேஷிற்கு, பள்ளித் தலைவர், நிர்வாக அறங்காவலர், தாளாளர் இணைந்து, 'பீனிக்ஸ் பெண்மணி'  என்னும் விருதினை வழங்கி கவுரவித்தனர். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.

