/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.ஐ.டி. க்கு அதிக மாணவர்களை தயார்படுத்தும் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி
/
ஐ.ஐ.டி. க்கு அதிக மாணவர்களை தயார்படுத்தும் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி
ஐ.ஐ.டி. க்கு அதிக மாணவர்களை தயார்படுத்தும் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி
ஐ.ஐ.டி. க்கு அதிக மாணவர்களை தயார்படுத்தும் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி
ADDED : செப் 27, 2025 01:06 AM

பு துச்சேரியை தலைமையிடமாக கொண்டு 2005ல் துவக்கப்பட்ட ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி, சென்னை, கோவை, விழுப்புரம், காரைக்கால் என முக்கிய நகரங்களில், 12 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
பள்ளியின் செயல்பாடு குறித்து ஆதித்யா கல்வி குழுமத்தின் நிறுவனர் ஆனந்தன் கூறியதாவது;
கோவை, காளப்பநாயக்கன்பாளையத்தில் செல்பட்டு வரும் ஆதித்யா வித்யா ஷ்ரம்-குருகிராம் பள்ளி மாணவர்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து தருவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
நல்ல பண்புகளுடன் சிறந்த கல்வியை பெறவும், கற்றலை மேம்படுத்துவதும், வளமான சவாலான அனுபவங்களை உருவாக்குவதும், மாணவர்கள் மனதில் வெற்றிகளையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதுதான் எங்கள் நோக்கம்.
மாணவர்களுக்கு, ஜெ.இ.இ., நீட், சி.ஏ மற்றும் சி.எம்.ஏ ஆகிய தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறோம். ஐ.ஐ.டி.க்கு அதிக மாணவர்களை தயார்படுத்தி அனுப்ப வேண்டும் என்ற இலக்கு தீர்மானிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கல்வியில் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு, 6ம் வகுப்பு முதல் ஒருங்கிணைந்த பாடத்திட்ட வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
கற்றலை தவிர, இசை, விளையாட்டு, நடனம், களப் பயணம், யோகா, தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறை, நல்ல கற்றல் சூழலை ஏற்படுத்தியுள்ளோம். மலேசியாவில் உள்ள யுகேஎம் பல்கலையில் நடந்த உலக அளவில் பள்ளிகளுக்கிடையேயான ஜூனியர் ஐன்ஸ்டீன் 2025 போட்டியில் எங்கள் பள்ளி பிளஸ்2 மாணவர்கள் அம்ரூத், சஞ்சித், கிருதிவ் ஜெயராம், சஞ்சய் ஆகியோர் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.