/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூவர் கொலை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
/
மூவர் கொலை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
ADDED : பிப் 13, 2024 12:09 AM
கோவை:கோவையில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதுாரை சேர்ந்த வக்கீல் ராஜா என்பவர் கொலை வழக்கு தொடர்பாக, தஞ்சாவூரை சேர்ந்த அருண், தியாகராஜன், மாதவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, 2015, ஆக., 26ல், சிறையிலிருந்து காரில் சென்ற போது, திருச்சி ரோடு, சிந்தாமணி புதுார் அருகே கும்பல் வழிமறித்து, மூவரையும் வெட்டி கொலை செய்தனர்.
இது தொடர்பாக, கூலிப்படையை சேர்ந்த திண்டுக்கல் மோகன்ராம் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு, கோவை தனிக்கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மோகன்ராம் உள்ளிட்ட 11 பேர் ஆஜராகவில்லை. அதை தொடர்ந்து விசாரணை, வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.