/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
த.மா.கா., கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை
/
த.மா.கா., கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை
ADDED : செப் 30, 2024 11:17 PM
பொள்ளாச்சி : த.மா.கா., மாநில செயற்குழு கூட்ட தீர்மானப்படி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆனைமலை முக்கோணம் பகுதியில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.
மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுகம் முகாமை துவக்கி வைத்தார். கோவை மாவட்ட தலைவர் பழனிசெவ்வேல் தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, புதிய உறுப்பினர்கள், கட்சியில் இணைக்கப்பட்டனர். கோவை தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன், மண்டல இளைஞரணி தலைவர் அபிராமி, மாநில தேர்தல் முறையிட்டுக் குழு உறுப்பினர் செல்லதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் கன்னிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.