/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., மாணவர் இல்லத்தில் சேர்க்கை
/
பி.எஸ்.ஜி., மாணவர் இல்லத்தில் சேர்க்கை
ADDED : ஏப் 26, 2025 11:16 PM
கோவை: கோவை,பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி., மாணவர் இல்லத்தில், 6 மற்றும் 7ம் வகுப்புகளுக்கான, ஆண் குழந்தை சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் இல்லாத ஏழை மாணவர்களுக்கே, இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, தங்குமிடம், உணவு, சீருடை, மருத்துவ சேவை, கணினிப் பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி உட்பட பள்ளிக்கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும், இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பங்களை பெற, உங்கள் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து, 'அப்ளிகேஷன்' என்று மெசேஜ் அனுப்பினால், 3 மணி நேரத்திற்குள் விண்ணப்பம் அனுப்பப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'விடுதி காப்பாளர், பி.எஸ்.ஜி., மாணவர் இல்லம், பீளமேடு, கோயம்புத்தூர் - 641004' என்ற முகவரிக்கு, மே 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு: 89032 99414, 63835 09436.

