/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் 'அட்மிஷன்' வரும் 24, 25ல் தரவரிசை பட்டியல்
/
வேளாண் பல்கலையில் 'அட்மிஷன்' வரும் 24, 25ல் தரவரிசை பட்டியல்
வேளாண் பல்கலையில் 'அட்மிஷன்' வரும் 24, 25ல் தரவரிசை பட்டியல்
வேளாண் பல்கலையில் 'அட்மிஷன்' வரும் 24, 25ல் தரவரிசை பட்டியல்
ADDED : ஜூன் 17, 2025 11:03 PM
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், 2025--2026ம் கல்வியாண்டுக்கு இளநிலை வேளாண் அறிவியல் சேர்க்கைக்காக, 30 ஆயிரத்து 333 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் பல்கலைக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் அண்ணாமலை பல்கலை ஆகியவற்றில் நடப்பு கல்வியாண்டுக்கான, 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும், சேர்க்கை துவங்கியுள்ளது.
அரசு கல்லூரிகளில் 2,516, தனியார் கல்லூரிகளில் 4,405 என, மொத்தம் 6,921 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கடந்த மே 9ம் தேதி முதல், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்றுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், 30 ஆயிரத்து 333 விண்ணப்பங்கள், பெறப்பட்டுள்ளன. இதில், இளநிலை பட்டப்படிப்புக்காக மட்டும் 28 ஆயிரத்து 536 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தரவரிசைப் பட்டியல்
'விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படும். கவுன்சிலிங் தேதியை வேளாண் பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தரவரிசைப் பட்டியல், வரும் 24 அல்லது 25ம் தேதி வெளியிடப்படும். விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் துவங்கியுள்ளன' என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.