/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
/
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : ஜூன் 03, 2025 12:47 AM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் மலை அருகே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 9 இளநிலை பட்டப்படிப்பு வகுப்புகள் உள்ளன. இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, கல்லூரியில் நேற்று துவங்கியது. 9 இளநிலை பட்டப்படிப்பு வகுப்புகளில், 480 இடங்கள் உள்ளன. இதற்கு 14,673 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று சிறப்பு பிரிவினருக்கான, கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
4ம் தேதியில் இருந்து, 14ம் தேதி வரை, பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற உள்ளது. தரவரிசை பட்டியல் விபரங்கள், கல்லூரி அறிவிப்பு பலகையிலும், கல்லூரி இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை, 10:00 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.
இந்த கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் அனைத்து சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு சான்றிதழ்களிலும் தேவையான அளவு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இத்தகவலை கல்லூரி கூடுதல் பொறுப்பு முதல்வர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

