/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : ஜூன் 05, 2025 01:05 AM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், நேற்று முதல், பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது.
மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் மலை அருகே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, கல்லுாரியில் நடைபெற்று வருகிறது.
9 இளநிலை பட்டப்படிப்பு வகுப்புகளில், 480 இடங்கள் உள்ளன. விண்ணப்பம் செய்தவர்களில், 14,673 பேர் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நேற்று பொது பிரிவினருக்கான கலந்தாய்வு கல்லுாரியில் தொடங்கியது.
இதுகுறித்து கல்லுாரி பொறுப்பு முதல்வர் மாரிமுத்து கூறியதாவது: கடந்த இரண்டு, மூன்று ஆகிய தேதிகளில், சிறப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது.
மொத்தம், 47 இடங்களுக்கு, எட்டு பேர் மட்டுமே சேர்ந்தனர். பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை குழுவைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஜெய்சங்கர், செந்தில்குமார், பாண்டியராஜன், தையல்நாயகி ஆகியோர் முன்னின்று, சான்றிதழ்களை சரிபார்த்து, பட்டப்படிப்பு வகுப்பு வாரியாக சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். முதல் நாளில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்தாய்வில் பங்கேற்றனர். இந்த கலந்தாய்வு பணி விடுமுறை நாட்களை தவிர்த்து வருகிற, 14ம் தேதி வரை நடைபெறும்.
இவ்வாறு கல்லுாரி முதல்வர் கூறினார்.