/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
/
தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : மே 10, 2025 02:08 AM
தொண்டாமுத்தூர், : தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.
தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பி.காம்., (பி.ஏ.,), பி.காம்., (சி.ஏ.,), பி.ஏ., (பொருளாதாரம்), பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்.சி., கணிதம் ஆகிய 6 பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்தாண்டு முதல் புதியதாக, பி.எஸ்.சி., கணினி அறிவியல் பிரிவு துவங்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், மேற்கண்ட பாடப்பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலமும், www.tngasa.in என்ற இணையதளம் மூலமும் வரும் 27ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.