தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அங்கன்வாடிகளில் சேர்க்கை துவக்கம்

அங்கன்வாடிகளில் சேர்க்கை துவக்கம்

அங்கன்வாடிகளில் சேர்க்கை துவக்கம்


ADDED : மே 23, 2025 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2025 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் வாயிலாக, கோவை மாவட்டத்தில் செயல்படும், 1,640 குழந்தைகள் மையங்களில், இரண்டு வயது முதல் ஐந்து வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு, செய்கைபாடல், கதை, விளையாட்டு, கல்வி உபகரணங்கள் வாயிலாக முன்பருவக்கல்வி கற்றுத்தரப்படுகிறது.

குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு, பள்ளி செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனர்.அங்கன்வாடி பணியாளர்கள், தற்போது வீடுகள் தோறும் குழந்தைகளுக்கான சேர்க்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனால், பெற்றோர்கள், 2 முதல் 5 வயதுக்குட்டப்பட்ட குழந்தைகளை, ஜூன் மாதத்திற்குள் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சேர்க்கவும்.தற்போது ஆதார் அட்டை வழங்கும் பணியும், குழந்தைகள் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள, கோவை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us