sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்; விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

/

அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்; விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்; விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்; விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தல்


UPDATED : மே 22, 2025 03:30 AM

ADDED : மே 22, 2025 12:31 AM

Google News

UPDATED : மே 22, 2025 03:30 AM ADDED : மே 22, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,; அரசு ஐ.டி.ஐ.,யில், 2025ம் ஆண்டுக்கான சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் அரசு பெண்கள், ஆண்கள் ஐ.டி.ஐ., செயல்பட்டு வருகிறது.

இங்கு, 2025 - 26ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது. மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு மற்றும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நேரில் வரும் மாணவர்கள், இந்நிலைய உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விரும்பும் பெண்களுக்கு, உச்ச வயது வரம்பு இல்லை.

பயிற்சியில் தேர்ச்சி பெற்றால், மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்படும்.

அனைத்து பயிற்சியாளர்களுக்கும், மாதம் தலா ரூ.750- உதவித்தொகை வழங்கப்படும். மாநில அரசின் நலத்திட்டங்கள் இதற்கு பொருந்தும். பயிற்சி முடிக்கும் தருவாயில், வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விவரங்களுக்கு, 98651 28182, 94990 55692, 88381 58132, 94422 39112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

என்னென்ன பயிற்சி?

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு பயிற்சியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆபரேட்டர், ஐ.ஓ.டி., டெக்னீசியன்(ஸ்மார்ட் ஹெல்த் கேர்), சர்விங் டெக்னாலஜி, தொழிற்பிரிவுகளும், இரண்டாண்டு பயிற்சியில் இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், தகவல் தொழில்நுட்பம், டெக்னீசியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுகளும், ஆறு மாத பயிற்சியில் ஸ்மார்ட் போன் டெக்னீசியன் கம் ஆப் டெஸ்டர், தொழிற்பிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us