/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நிதி ஒதுக்கியது அ.தி.மு.க., அதை பதுக்கியது தி.மு.க.,'
/
'நிதி ஒதுக்கியது அ.தி.மு.க., அதை பதுக்கியது தி.மு.க.,'
'நிதி ஒதுக்கியது அ.தி.மு.க., அதை பதுக்கியது தி.மு.க.,'
'நிதி ஒதுக்கியது அ.தி.மு.க., அதை பதுக்கியது தி.மு.க.,'
ADDED : பிப் 17, 2024 07:02 AM
கோவை : அ.தி.மு.க., சார்பில், கோவை தொண்டாமுத்துார் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று தெருமுனை பிரசாரம் செய்யப்பட்டது.
அதில், அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணை செயலாளரும், திரைப்பட நடிகையுமான விந்தியா பேசியதாவது:
கொங்கு மக்கள் எப்போதும் கட்சியை பார்த்து ஓட்டுப் போட மாட்டார்கள்; நியாயத்தை பார்த்து ஓட்டுப் போடுவார்கள். அந்த நியாயம், அ.தி.மு.க.,வில் இருக்கிறது என நம்பி, இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுவார்கள். கொங்குவுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் உள்ள உறவு ஆழமானது.
தி.மு.க.,வுக்கு கோவையை பிடிக்காது. அதனால், கொங்கு பகுதிக்கு தி.மு.க., எதுவும் செய்யாது. எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டார்கள்.
தி.மு.க., ஆட்சியில் செய்வதாக, கனிமொழி கூறிய திட்டங்களுக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில், தி.மு.க., பதுக்கியது எவ்வளவு. நாங்கள் நிதி ஒதுக்கியது உண்மை; அவர்கள் பதுக்கியது உண்மை.
இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு உதாரணமாக இருந்த ஊர் கோவை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை, துண்டு துண்டாக உடைத்து சின்ன, சின்ன கட்சியாக்கியது கருணாநிதி. அவர்களை ஒரு சீட்டுக்கு கையேந்த வைத்தது கருணாநிதி.
மைனாரிட்டி மக்கள் மீது, தி.மு.க.,வுக்கு பாசம் வருகிறது என்றால், தேர்தல் வருகிறதென அர்த்தம். வேஷம் போட்டு வரும் நாடக கோஷ்டியான, தி.மு.க.,வை நம்பாதீர்கள்.
கடன் வாங்குவதில், கஜானாவை காலி செய்வதில் ஸ்டாலின் நம்பர் ஒன். டிசைன் டிசைனாக வாக்குறுதி கொடுத்து, மக்களை ஏமாற்ற வருவார்கள்.
வீட்டுக்கு வரும் திருடனை கூட நம்புங்கள்; தி.மு.க.,வினரை நம்பாதீர்கள். கடந்த மூன்றாண்டுகளாக தமிழகம் இழந்த உரிமைகளை மீட்க, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளியுங்கள்.
இவ்வாறு, விந்தியா பேசினார்.