/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகர் மன்ற கூட்டத்தில் விவாதிக்காமல் தீர்மானங்கள் நிறைவேற்றம்: அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
நகர் மன்ற கூட்டத்தில் விவாதிக்காமல் தீர்மானங்கள் நிறைவேற்றம்: அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நகர் மன்ற கூட்டத்தில் விவாதிக்காமல் தீர்மானங்கள் நிறைவேற்றம்: அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நகர் மன்ற கூட்டத்தில் விவாதிக்காமல் தீர்மானங்கள் நிறைவேற்றம்: அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜன 30, 2024 10:35 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகர் மன்ற கூட்டத்தில் விவாதிக்காமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் நேற்று நகர்மன்ற கூட்டம் தலைவர் மெஹரிபா பர்வின் தலைமையில் நடந்தது. கமிஷனர் அமுதா முன்னிலை வகித்தார்.
கூட்டம் துவங்கியதும் தலைவர் மெஹரிபா பர்வின் தீர்மானங்களை படித்து கவுன்சிலர்களுடன் விவாதிக்காமல், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என அறிவித்து, அங்கிருந்து கிளம்பி சென்றார். அவரை தொடர்ந்து நகராட்சி கமிஷனரும், அதிகாரிகளும், தி.மு.க. கவுன்சிலர்களும் சென்றனர். இந்த போக்கை கண்டித்து அ.தி.மு.க.,நகர்மன்ற குழு தலைவர், முகமது சலீம், கவுன்சிலர்கள் குருபிரசாத், மீரான் மொய்தீன், கலைச்செல்வி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில், அண்மையில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மீது நகராட்சி கமிஷனர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக நாங்கள் பேசிவிடுவோம் என்றுதான், இப்படி மக்கள் பிரச்சனை குறித்து விவாதிக்காமல், தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்காமல் இவ்வாறு செய்துள்ளனர். கமிஷனரிடம் பேச வேண்டும் நில்லுங்கள் என்றோம். அவர் என் அறைக்கு வந்து பேசுங்கள் என்கிறார்.
அறைக்கு சென்று பேசினால் வழக்கு பதிவு செய்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. மக்களை பற்றி கவலைப்படாமல் நகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது, என்றனர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அமுதா கூறுகையில், தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் தலைவருக்கு தான் உள்ளது. அவர் நிறைவேற்றினார். உள்ளிருப்பு போராட்டம் நடத்தினால், நகராட்சி அலுவலக பணிகள் பாதிக்கப்படும். நகராட்சிக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்'', என்றார்.
இதுகுறித்து நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாகவே அவ்வப்போது அ.தி.மு.க., வினர் நகராட்சி கூட்டத்தின் போது, ஏதாவது ஒரு பிரச்னை செய்து கூட்டத்தை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், மக்களிடம் விளம்பரம் தேட அ.தி.மு.க.,வினர் உள்ளிருப்பு செய்துள்ளனர். மெஜாரிட்டியின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சியின் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்க முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதனிடையே, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அ.தி.மு.க., கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. நகராட்சி கமிஷனரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து போராட்டத்தை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முடித்து கொண்டனர்.
அ.தி.மு.க., கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.