/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
/
அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
ADDED : அக் 08, 2024 11:54 PM

மேட்டுப்பாளையம் : தி.மு.க., அரசை கண்டித்து, மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து, நேற்று தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், நகரக் கழக செயலாளர் வான்மதி சேட் தலைமையில், கழக அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.,வுமான, ஏ.கே.செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., ஓ.கே. சின்னராஜ் ஆகியோர் முன்னிலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.---
பெரியநாயக்கன்பாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. கோவை புறநகர் வடக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார். இதே போல இடையர்பாளையம் பிரிவு, இடிகரை, துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.