/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் பாலத்தில் அ.தி.மு.க., அத்துமீறல்; தேர்தல் வரும் முன்பே அலப்பறை ஆரம்பம்
/
ரயில் பாலத்தில் அ.தி.மு.க., அத்துமீறல்; தேர்தல் வரும் முன்பே அலப்பறை ஆரம்பம்
ரயில் பாலத்தில் அ.தி.மு.க., அத்துமீறல்; தேர்தல் வரும் முன்பே அலப்பறை ஆரம்பம்
ரயில் பாலத்தில் அ.தி.மு.க., அத்துமீறல்; தேர்தல் வரும் முன்பே அலப்பறை ஆரம்பம்
ADDED : பிப் 07, 2024 10:52 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு - வடசித்துார் செல்லும் ரோட்டில், ரயில்வே பாலம் சுவற்றில் அத்துமீறி அ.தி.மு.க., கட்சி விளம்பரம் எழுதப்படுகிறது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் சார்பில் பூத் கமிட்டி மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது, தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதேபோன்று, பொதுக்கூட்டம், ஆலோசனை கூட்டங்களில், கட்சி தலைவர்கள் மற்ற கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சிக்கின்றனர். கட்சி தலைவர்களை விமர்சித்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டுவதும், சமூக வலைதளங்கில் போட்டோக்கள் பதிவிடுவது, ஸ்டேட்டஸ் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், கிணத்துக்கடவு - வடசித்துார் ரோட்டில், கிணத்துக்கடவு ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சுவரில், அ.தி.மு.க., சார்பில் விதிமீறி விளம்பரம் எழுதப்படுகிறது. அரசு சுவரில் கட்சியினர் விளம்பரம் செய்வது விதிமீறலாகும். அரசு சுவர்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, அ.தி.மு.க., சார்பில், சுவரில் கட்சி விளம்பரம் எழுவதை கண்டு, மற்ற கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தேர்தல் தேதி அறிவித்ததும், அரசு சுவரில் இருக்கும் இதுபோன்று விளம்பரங்களை அழிக்க வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுவர் விளம்பரம் எழுதக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும்.
இதை கருத்தில் கொண்டு, அரசு சுவரை அலங்கோலப்படுத்தும் வகையில், கட்சியினர் சுவர் விளம்பரம் எழுதுவதை, அரசு துறை அதிகாரிகள் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மற்ற கட்சியினரும் போட்டி போட்டு விளம்பரம் எழுதி, அரசு சுவரை ஆக்கிரமிப்பு செய்வார்கள். அதற்கு முன்பாக, சுவர் விளம்பரம் எழுதுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

