/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி' பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் உறுதி

ADDED : பிப் 05, 2024 01:48 AM
பொள்ளாச்சி;''தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளமாக லோக்சபா தேர்தல் இருக்கும்; அ.தி.மு.க., 40 தொகுதியிலும் வெற்றி பெறும்,'' என, பொள்ளாச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன் கூறினார்.
பொள்ளாச்சி நகர பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற ஜெயராமன், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சரியான சூழல் அமைய வேண்டுமென்றால், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு அடித்தளமாக லோக்சபா தேர்தல் இருக்கும். அ.தி.மு.க., சார்பில் தமிழகம், புதுச்சேரி என, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெறும்.
அ.தி.மு.க,, பொதுச்செயலர் பழனிசாமியை, முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சியோடு கூட்டணி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.