/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தி சிலை வளாகத்தில் விளம்பர பேனர் அகற்றம்
/
காந்தி சிலை வளாகத்தில் விளம்பர பேனர் அகற்றம்
ADDED : ஜன 23, 2025 11:33 PM

வால்பாறை; 'தினமலர்' செய்தி எதிரொலியால், வால்பாறையில் காந்தி சிலையை மறைத்து வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.
வால்பாறை நகரில் உள்ள காந்தி சிலையை மறைத்து, விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது, என, நகராட்சி நிர்வாகம் எச்சரித்தும், தடையை மீறி அரசியல் கட்சியினர் அவ்வப்போது விளம்பர பேனர்கள் வைக்கின்றனர்.
இந்நிலையில், காந்திசிலையை மறைத்து, விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்ற வேண்டும், என, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் உத்தரவின் பேரில், காந்தி சிலையை மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்சி பேனர்கள், போலீசார் நேற்று அகற்றினர். 'தினமலர்' செய்தி எதிரொலியாக பேனர்கள் அகற்றப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
மேலும், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, கிடப்பில் போடப்பட்டுள்ள, நகராட்சிக்கு சொந்தமான கண்ணாடி மாளிகை கட்டடம் முழுவதிலும், தி.மு.க.,வினர் நிரந்தரமாக விளம்பர பேனர்கள் வைத்துள்ளனர். அரசு கட்டடத்தில் விதிமுறையை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை போலீசார் அகற்ற வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

