/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே இடங்களில் விளம்பர பலகைகள் அகற்றம்! கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
/
ரயில்வே இடங்களில் விளம்பர பலகைகள் அகற்றம்! கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
ரயில்வே இடங்களில் விளம்பர பலகைகள் அகற்றம்! கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
ரயில்வே இடங்களில் விளம்பர பலகைகள் அகற்றம்! கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
ADDED : ஏப் 05, 2025 11:09 PM

கோவை: கோவையில், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று அகற்றினர். நேற்று ஒரே நாளில், 53 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.
கோவையில் சாலை சந்திப்புகள், மேம்பாலங்களுக்கு அருகே உள்ள கட்டடங்கள், வளைவுகள் உள்ளிட்ட பகுதிகளில், வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.
ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. இவற்றை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதும், சென்னை ஐகோர்ட்டில் விளம்பர ஏஜன்சி வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடையுத்தரவு பெற்றது.
விளம்பர பலகைகள் வைப்பது தொடர்பாக, தமிழக அரசு புதிதாக நிபந்தனைகள் விதித்து அரசாணை வெளியிட்டது. அதன்படி, எந்தவொரு பகுதியில் விளம்பரங்கள் வைப்பதாக இருப்பினும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவதோடு, மாவட்ட நிர்வாகத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அரசாணைக்கு எதிராக ஒரு விளம்பர ஏஜன்சி, வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, நகர்ப்பகுதியில் உள்ள அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற, நகரமைப்பு பிரிவினருக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.
நகரமைப்பு அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் உள்ள விளம்பர பலகைகளை, நேற்று அகற்றினர்.
புரூக் பீல்ட்ஸ் ரோட்டில் இருந்து அவிநாசி ரோடு மேம்பாலத்துக்கு செல்லும் வழியில், சாலையின் இடது புறம் ரயில்வேக்கு சொந்தமான பகுதியில், வரிசையாக இருந்த அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன.
இதேபோல், துடியலுார் கலைமகள் கார்டன், சேரன் காலனி, ஹோப்ஸ் காலேஜ் ரயில்வே பகுதியில் இருந்த விளம்பரங்கள் எடுக்கப்பட்டன. மொத்தம், 53 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.
அவற்றை அகற்றிய இடங்களில் மீண்டும் வைக்காத அளவுக்கு இரும்பு சட்டங்களையும் வெட்டி அகற்ற நகரமைப்பு பிரிவினருக்கு கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.
நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'இரும்பு சட்டங்களை அகற்றும் பணியில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காக, நிதானமாக கழற்றப்படுகிறது. வெல்டிங் கம்பெனியை சேர்ந்தவர்களை அழைத்து அறுத்தெடுக்க முயற்சிக்கிறோம்' என்றனர்.