/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் விளம்பரங்கள்; விதிமீறலில் நகராட்சி நிர்வாகம்
/
பஸ் ஸ்டாண்டில் விளம்பரங்கள்; விதிமீறலில் நகராட்சி நிர்வாகம்
பஸ் ஸ்டாண்டில் விளம்பரங்கள்; விதிமீறலில் நகராட்சி நிர்வாகம்
பஸ் ஸ்டாண்டில் விளம்பரங்கள்; விதிமீறலில் நகராட்சி நிர்வாகம்
ADDED : பிப் 20, 2024 10:44 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பொது இடம் மற்றும் தனியார் கட்டடங்களில், அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, அதன் ஒரு பகுதியாக, புது பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை மீது விளம்பர பலகைகள் அதிகளவு வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத நடைமுறை தற்போது அதிகரித்துள்ளதால், அதிகளவு விளம்பரங்கள் வைக்கப்பட்டு உள்ளதால், விபத்துக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: புது பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. இவ்வழியாக, பாலக்காடு செல்லும் வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. பஸ் ஏறுவதற்காக பலரும் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில், விளம்பர பலகைகள் அதிகளவு வைக்கப்பட்டுள்ளன.
கண்ணை கவரக்கூடிய விளம்பர பலகையால் வாகன ஓட்டுனர்களின் கவனம் சிதறி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
மேலும், இயற்கை சீற்றத்துக்கு, பிரமாண்ட இரும்பு பிரேம்கள் சரிந்து, அசம்பாவிதங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், தனியார் இடங்களில் இதுபோன்று இருந்த விளம்பர பலகைகள் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
தற்போது, நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள புது பஸ் ஸ்டாண்டில் விளம்பர பலகைகள் அதிகளவு வைக்கப்பட்டுள்ளன.இது குறித்து அதிகாரிகள் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுத்தால், அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.
போக்குவரத்து நிறைந்த இடங்களில் தனியார் கட்டடங்களில் கூட விளம்பரங்கள் வைக்க கூடாது என, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகமே விதிமீறலில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

