தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தொழில்துறை நிபுணர்களுடன் கலந்துரையாடல்

தொழில்துறை நிபுணர்களுடன் கலந்துரையாடல்

தொழில்துறை நிபுணர்களுடன் கலந்துரையாடல்


UPDATED : ஜூலை 04, 2026 11:28 PM

ADDED : ஜூலை 04, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 11:28 PM ADDED : ஜூலை 04, 2026 07:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில் கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் துறை சார்பில், டி.சி.எஸ். நிறுவன தொழில்துறை நிபுணர்கள், மாணவர்களுக்கு இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

டி.சி.எஸ். நிறுவன மனிதவளத் துறையின் தமிழகம், புதுச்சேரி கல்விக் கூட்டாண்மை பிராந்தியத் தலைவர் ரவிகுமார் மூர்த்தி பேசுகையில், '' மாணவர்கள் ஆராய்ச்சி, தொழில்நுட்பப் போட்டிகள், புதுமைச் சவால்கள் ஆகியவற்றில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும். தன்னம்பிக்கை, தலைமைத்துவத் திறன் மற்றும் புதுமைச் சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

டி.சி.எஸ். மூத்த வணிக பங்குதாரர், தொழில்நுட்ப தலைவர் கிருஷ்ணன் கணேசன், கல்லுாரி நிறுவனர் பொங்கலுார் பழனிசாமி, துணைத் தலைவர் இந்து, முதன்மை செயல் அலுவலர் மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, டீன்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us