பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் 'கருவுருதல் மையம்' திறப்பு
பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் 'கருவுருதல் மையம்' திறப்பு
UPDATED : ஜூலை 04, 2026 06:34 PM
ADDED : ஜூலை 04, 2026 06:21 PM
கோவை: பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் ஒருங்கிணைந்த 'பி.எஸ்.ஜி.கருவுருதல் 360' மையம் திறப்பு விழா, நேற்று நடந்தது. மருத்துவமனை இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் தலைமை வகித்தார்.
இதில் வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சவால்கள், உடல் பருமன், மன அழுத்தம், ஆண் மலட்டுத்தன்மை அதிகரிக்க காரணம், நவீன சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவத்துறை வல்லுநர்கள் விளக்கினர்.
தொடர்ந்து 'குழந்தை செல்வம் தாமதம் ஆவது- காலத்தின் கட்டாயமா; சுயவிருப்பமா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
பி.எஸ்.ஜி. நர்சிங் கல்லுாரி முதல்வர் ஜெயதீபா, நர்சிங் கண்காணிப்பாளர் டாக்டர் அனுராதா, மைய பொறுப்பாளர்கள் டாக்டர் கிருஷ்ணமோகன், டாக்டர் ஆதிலட்சுமி, பி.எஸ்.ஜி. விஷ்ணுகிராந்தி அமைப்பின் இயக்குனர் பானுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
