/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனிக்காலத்தில் கோழி பராமரிப்பு ஆராய்ச்சி மைய தலைவர் அறிவுரை
/
பனிக்காலத்தில் கோழி பராமரிப்பு ஆராய்ச்சி மைய தலைவர் அறிவுரை
பனிக்காலத்தில் கோழி பராமரிப்பு ஆராய்ச்சி மைய தலைவர் அறிவுரை
பனிக்காலத்தில் கோழி பராமரிப்பு ஆராய்ச்சி மைய தலைவர் அறிவுரை
ADDED : டிச 23, 2024 04:19 AM
கோவை : பனிக்காலங்களில் நிலவும் குறைந்த தட்பவெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் கிருமிகள் வளர்ச்சிக்கு ஏதுவாக இருப்பதால், நோய் கிருமி தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனால், கோழி வளர்ச்சி, உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, உரிய பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து, கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:
பொதுவாகவே, அக்., -நவ., டிச., காலங்களில் கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் தனிப்பட்ட கவனம் தேவை.
கூரைகளில் உள்ள ஓட்டைகள், ஒழுகும் இடங்களை சரிசெய்தல் அவசியம். பண்ணையை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோழிகளின் இருப்பிடத்தில், நல்ல காற்றோட்டம் இருப்பதுடன், வெப்பம் வெளியேறாமல் வெதுவெதுப்பாக இருப்பதற்கு, கோணிப்பையில் பக்கத்திரைகள் தொங்கவிடுவது மிகவும் அவசியம்.
இத்திரையை, சூரியன் உதயம் ஆன இரண்டு மணி நேரம் கழித்து நீக்க வேண்டும்.
அதே போல், 24 மணி நேரமும், பக்கத்திரைகளை தொங்கவிடக்கூடாது. மழை நேரத்தில், மழை பெய்து முடித்தவுடன் திரைகளை நீக்கிவிட வேண்டும்.
உலர் தீவனங்களை தர வேண்டும். குளிர்காலங்களில் கோழிகள் குறைந்த நீரையே குடிக்கும். நீர் குளிர்ச்சியாக இருந்தால், தண்ணீர் உட்கொள்ளும் அளவு குறைந்துவிடும். ஆகவே, வெதுவெதுப்பான, சுத்தமான நீரை அளிக்க வேண்டும்.
ரத்தக்கழிச்சல் நோய் பாதிப்பை தவிர்க்க, தீவனத்தில் தகுந்த தடுப்பு மருந்து கலந்து கொடுக்க வேண்டும். இதுபோன்று, உரிய பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றுவதால், பாதிப்புகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

