/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை விவசாயிகள் கருத்தரங்கில் அறிவுரை
/
தென்னை விவசாயிகள் கருத்தரங்கில் அறிவுரை
ADDED : ஜூன் 27, 2025 09:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையத்தில் உள்ள சமுதாய கூடத்தில், கல்ப விருக் ஷா அமைப்பு சார்பில் தென்னை விவசாயிகளுக்கு கருத்தரங்கு நடந்தது.
இதில், தென்னைக்கு இட வேண்டிய முக்கிய உரம், அதன் அளவுகள், இயற்கை உரம் அளித்தல், இயற்கை உரம் தயாரித்தல், நோய் கட்டுப்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. வேளாண் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதில், விவசாய ஆலோசகர் கண்ணன், கல்ப விருக் ஷா அமைப்பின் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும், கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கப்பட்டது.