/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டி.என். ஸ்பார்க்' திட்டத்துக்கு பாடவேளை ஒதுக்க அறிவுரை
/
'டி.என். ஸ்பார்க்' திட்டத்துக்கு பாடவேளை ஒதுக்க அறிவுரை
'டி.என். ஸ்பார்க்' திட்டத்துக்கு பாடவேளை ஒதுக்க அறிவுரை
'டி.என். ஸ்பார்க்' திட்டத்துக்கு பாடவேளை ஒதுக்க அறிவுரை
ADDED : செப் 05, 2025 10:05 PM
கோவை:
பள்ளிகளில் மன்ற செயல்பாடு, நுாலக பாடவேளை உள்ளிட்ட கல்வி சாரா இதர செயல்பாடுகளுக்காக, வாரத்தில் இரண்டு பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளன. இதனுடன், 'டிஎன் ஸ்பார்க்' திட்டத்துக்கும் இரண்டு பாடவேளை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளிகளில், 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அடிப்படை கணினி அறிவியல், கல்விசார் நிகழ்நிலை கருவிகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை கற்றுக்கொடுக்க, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வழியாக பாடங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக, சமீபத்தில் 'டிஎன் ஸ்பார்க்' பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டன.
இப்பாடப்புத்தகங்களில், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான உள்ளடக்கங்கள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது, பாடங்களை எடுப்பதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வாரத்துக்கு இரண்டு வேளை ஒதுக்கி, ஆய்வகங்களில் மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வகுப்பு பாடங்களுக்கு இடையே, மன்ற செயல்பாடுகள் போன்ற மாணவர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளோடு இணைந்து, 'டிஎன் ஸ்பார்க்' திட்டத்துக்கு கவனம் செலுத்த வேண்டுமென ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.