/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எலுமிச்சையில் நோய் தாக்கம் கட்டுப்படுத்த ஆலோசனை
/
எலுமிச்சையில் நோய் தாக்கம் கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : டிச 27, 2024 10:52 PM
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு வட்டாரத்தில் எலுமிச்சையில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், தென்னை மற்றும் பிறவகை காய்கறி பயிர்கள் சாகுபடி அதிகளவில் உள்ளது. இதில், எலுமிச்சை சாகுபடி குறைந்த அளவே உள்ளது.
எலுமிச்சையில், இலை துளைக்கும் புழு மற்றும் பாக்டீரியல் சொறி நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதில், இலை துளைக்கும் புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பெண்ணை, 30 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பாக்டீரியல் சொறி நோயினை கட்டுப்படுத்த, ஸ்ட்ரெப்டோசைக்ளின் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு போன்றவற்றை மாதத்திற்கு நான்கு முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்து வந்தால் நோய் கட்டுப்படுத்தலாம். இத்தகவலை, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.