/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுச்சாவடிகள் குறித்து ஆலோசனை பதட்டமான பகுதியில் கள ஆய்வு
/
ஓட்டுச்சாவடிகள் குறித்து ஆலோசனை பதட்டமான பகுதியில் கள ஆய்வு
ஓட்டுச்சாவடிகள் குறித்து ஆலோசனை பதட்டமான பகுதியில் கள ஆய்வு
ஓட்டுச்சாவடிகள் குறித்து ஆலோசனை பதட்டமான பகுதியில் கள ஆய்வு
ADDED : பிப் 22, 2024 05:25 AM

பொள்ளாச்சி: வால்பாறை சட்டசபை தொகுதியில், பதட்டமான 12 ஓட்டுச்சாவடிகளில், நேரில் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நிறைமதி தலைமையில் கூட்டம் நடந்தது.
தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் செந்தில்குமார், வால்பாறை, ஆனைமலை மற்றும் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், வனச்சரகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வால்பாறை சட்டசபை தொகுதியில், ஆனைமலையில், 168, வால்பாறையில், 68 என, மொத்தம், 236 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், ஆனைமலையில், 9, வால்பாறையில் 3 என, மொத்தம், 12 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என, குறிப்பிட்டனர்.
பதட்டமான ஓட்டுச்சாவடிகளை விரைவில் நேரில் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல, 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் ஆனைமலை வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட கோவை கலெக்டர் கிராந்திகுமார், வேட்டைக்காரன்புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டார்.
அங்கு, தேவையான அடிப்படை வசதிகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.