/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : பேரிடர் மேலாண்மை திட்டத்தில் அறிவுரை
/
மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : பேரிடர் மேலாண்மை திட்டத்தில் அறிவுரை
மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : பேரிடர் மேலாண்மை திட்டத்தில் அறிவுரை
மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : பேரிடர் மேலாண்மை திட்டத்தில் அறிவுரை
ADDED : நவ 07, 2025 08:54 PM
- - நமது நிருபர் -
மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் சார்பில், சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மழை காலத்தில் குடிநீரில் கிருமி தொற்று ஏற்படும் என்பதால், அந்த நீரை பருகும் போது, உடல்நலம் பாதிக்ககூடும்; எனவே, நீரை காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும். சூடான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
காய்கறி அல்லது அசைவ சூப், ரசம், பால், டீ, காபி போன்ற சூடான திரவ உணவுகளை அருந்தலாம். அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியான பொருட்களை மழை காலத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும்.
தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில், மின் விளக்குகளை கவனமுடன் கையாள வேண்டும். உடைந்த மின் சாதன பொருட்களை உடனடியாக மாற்ற வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். டிரான்ஸ்பார்மர், மின் கம்பிகள் மற்றும் மின் பகிர்வு பெட்டிகளின் அருகில் செல்ல வேண்டாம்.
மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால், உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னல் ஏற்படும் போது ஏ.சி., டிவி., கம்ப்யூட்டர், மொபைல்போன், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம். வீட்டு சுவரில் நீர் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்கவும், பழுதடைந்த வீடாக இருந்தால் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட வேண்டும். போதுமான அளவு குடிநீர் மற்றும் உணவு தின்பண்டங்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். எமர்ஜென்சி லைட், மெழுகுவர்த்தி போன்றவற்றை தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

