தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செவிலியர்களுக்கு மன அழுத்தம் ;மேலாண்மை குறித்த ஆலோசனை

செவிலியர்களுக்கு மன அழுத்தம் ;மேலாண்மை குறித்த ஆலோசனை

செவிலியர்களுக்கு மன அழுத்தம் ;மேலாண்மை குறித்த ஆலோசனை


ADDED : அக் 26, 2025 08:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 08:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில், செவிலியர்களுக்கு மன அழுத்த மேலாண்மை குறித்த ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனைகளில், சிகிச்சையில் முக்கிய பங்கு வகிப்பவர் செவிலியர்கள். சேவை மனப்பாங்குடன், முகம் சுழிக்காமல், மன ரீதியாக தங்களை முழுமையாக அர்ப்பணித்து, தோழமை பண்புடன் நோயாளிகளை கவனிக்கின்றனர்.

அதிலும், நோயாளிகளை பரிசோதனை செய்தல், அவர்களது உடல்நிலை, சுவாச நிலை, ரத்த அழுத்தத்தின் விகிதம் மற்றும் இதயத் துடிப்பின் விகிதம் ஆகியவற்றை பதிவு செய்தல், டாக்டர்கள் ஆலோசனைபடி ஊட்டச்சத்து மருந்து மாத்திரைகளை கொடுத்தல் என, பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் வருகை அதிகரிக்கும் நிலையில், சிகிச்சைக்கு ஏற்ப பொறுமை காத்துக் கொள்ள முடியாத உறவினர்கள், அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இத்தகைய நபர்களை கையாளும்போதும், அதிக பணிச்சுமையின் போதும், செவிலியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இப்பிரச்னைகளை எளிதாக எதிர்கொள்ள உதவும் வகையில் அவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வால்பாறை அரசு மருத்துவமனையில், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை குறித்த ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us