/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டாஞ்சியில் இரவு நேர பயணத்தை தவிர்க்க அறிவுரை
/
கட்டாஞ்சியில் இரவு நேர பயணத்தை தவிர்க்க அறிவுரை
ADDED : ஜூன் 11, 2025 09:03 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே கட்டாஞ்சி மலையில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், அவ்வழியாக இரவு நேர பயணத்தை தவிர்க்க வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே மருதூரில் கட்டாஞ்சி மலை உள்ளது.கட்டாஞ்சி மலைப்பாதை சாலை வழியாக வெள்ளியங்காடு, மேட்டுப்பாளையம், வனபத்திரகாளியம்மன் கோயில், தேக்கம்பட்டி, மஞ்சூர், தோலம்பாளையம், கோபனாரி போன்ற கிராமங்களுக்கு செல்ல முடியும். கட்டாஞ்சி மலைப்பாதையில் யானைகள், காட்டு பன்றிகள் நடமாட்டம் உள்ளன.
இதுகுறித்து, காரமடை வனத்துறையினர் கூறுகையில், கட்டாஞ்சி மலையில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அவ்வழியாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் செல்ல வேண்டாம். வாகனங்களை சாலையோரம் நிறுத்தக்கூடாது, என்றனர்.---