/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுரை
/
தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுரை
ADDED : ஜூலை 28, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட ஐடையம்பாளையம், பெள்ளேபாளையம், இலுப்பநத்தம். இரும்பொறை, மூடுதுறை, சின்னக்கள்ளிப்பட்டி ஆகிய ஊராட்சிகளிலுள்ள 114 கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க, குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையத்தில் பெய்து வரும் மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, ஆற்று நீர் மண் கலந்து செந்நிறமாக செல்கிறது. இதனால் கிராமங்களில் குடிநீரை காய்ச்சி குடிக்க மக்களுக்கு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்.--