தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'சரக்குகளை ஏற்றும் முன் கவனம்' டிரைவர், நடத்துனருக்கு அறிவுரை

 'சரக்குகளை ஏற்றும் முன் கவனம்' டிரைவர், நடத்துனருக்கு அறிவுரை

 'சரக்குகளை ஏற்றும் முன் கவனம்' டிரைவர், நடத்துனருக்கு அறிவுரை


ADDED : டிச 26, 2025 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2025 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

: பஸ்களில் பார்சல் ஏற்றும் முன் முழுமையான விபரம் தெரிந்து கொண்டு, ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பஸ்களில் பான் மசாலா பொருட்கள் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

ஒசூர் - கிருஷ்ணகிரி வழித்தடத்தில் இயங்கி பஸ்களில் திடீர் பரிசோதனை நடத்தியபோது, பஸ் பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பஸ்களில் பார்சல் ஏற்றும் முன் முழுமையான விபரம் தெரிந்து கொண்டு, ஏற்ற வேண்டும். தேவைப்பட்டால் சோதனையிட வேண்டும் என்பது, வழக்கமான நடைமுறை தான். டிரைவர், நடத்துனர் பிரச்னை தெரியாமல் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதால், அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது' என்றனர்

- நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us