/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியலில் பிழை தவிர்க்கதேர்தல் பிரிவினருக்கு அறிவுரை
/
வாக்காளர் பட்டியலில் பிழை தவிர்க்கதேர்தல் பிரிவினருக்கு அறிவுரை
வாக்காளர் பட்டியலில் பிழை தவிர்க்கதேர்தல் பிரிவினருக்கு அறிவுரை
வாக்காளர் பட்டியலில் பிழை தவிர்க்கதேர்தல் பிரிவினருக்கு அறிவுரை
ADDED : மார் 21, 2025 02:26 AM
கோவை: வாக்காளர் பட்டியல் தவறுகளோ, பிழைகளோ இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும் என்று தேர்தல் பிரிவு பணியாளர்களுக்கு கலெக்டர் பவன் குமார் அறிவுரை வழங்கினார்.
தேர்தல் பிரிவு பணியாளர்களுக்கான சிறப்புக்கூட்டம், கலெக்டர் பவன்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், 'வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குதல், திருத்தம் செய்வது, முகவரி மாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை, சரியாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள வேண்டும்.
எந்த இடத்திலும் தவறுகளோ, பிழைகளோ இருக்ககூடாது. தெளிவான நடைமுறையை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு செல்லும் வாக்காளர்களின் எல்லையை சரியாக வரையறுக்க வேண்டும்' என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (தேர்தல்) பாபு, தாசில்தார் தனிகைவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.