/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெள்ளை ஈ பிரச்னைக்கு தீர்வு; ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறிவுரை
/
ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெள்ளை ஈ பிரச்னைக்கு தீர்வு; ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறிவுரை
ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெள்ளை ஈ பிரச்னைக்கு தீர்வு; ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறிவுரை
ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெள்ளை ஈ பிரச்னைக்கு தீர்வு; ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : பிப் 18, 2025 10:07 PM

பொள்ளாச்சி; ''விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, தென்னையில் வெள்ளை ஈ பிரச்னைக்கு தீர்வு காண முடியும்,'' என, ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், இலைகருகல், அழுகல் நோய், கேரளா வாடல் நோய், குருத்து கட்டை, சாறு வடிதல், பென்சில் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில், தற்போது வெள்ளை ஈ தாக்குதலின் பாதிப்பு அதிகமாகியுள்ள சூழலில் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.
இந்த பாதிப்பு குறித்து வேளாண்துறை அமைச்சகத்துக்கு தகவல் சென்றது. இதையடுத்து, தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நேற்று ஆய்வு நடந்தது. ஆவல்சின்னாம்பாளையத்தில், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்து ஆலோசனை நடத்தப்பட்டது.அதில், 'விவசாயிகள், வாழ்வாதார பிரச்னை; இதற்குரிய தீர்வு காண வேண்டும்; வெள்ளை ஈ பூச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சிரமமாக உள்ளது,' என தெரிவித்தனர்.
இதையடுத்து, வேளாண்மை பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி பேசும்போது, 'மஞ்சள் நிற அட்டை கட்டுங்க; வேஸ்ட் ஆயிலை தடவுங்க; ஒட்டுண்ணிகளை விட்டால், பூச்சிகளை தின்றுவிடும்,' என அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், 'விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெள்ளை ஈ பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ஒரு விவசாயி செய்தால் மட்டும் தீர்வு கிடைக்காது,' என்றார்.
வீதம்பட்டியில் ஆய்வு
குடிமங்கலம் வட்டாரத்தில், பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியில் பருவமழைக்கு பிறகு வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று வீதம்பட்டி பகுதியில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் குமாரவேல்பாண்டியன் தலைமையில், துணை இயக்குனர் சசிகலா, உதவி இயக்குனர்கள் செல்வக்குமார், உமாசங்கரி, கலாமணி, தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பிறகு, 'வெள்ளை ஈக்களின் நடமாட்டம் மற்றும் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, தென்னந்தோப்புகளில், ஏக்கருக்கு, 2 விளக்கு பொறியை, இரவு 7:00 மணியில் இருந்து 11:00 மணி வரை வைத்து, ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்,' உள்ளிட்ட நோய்க்கட்டுப்பாடு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். ஆய்வின் போது, குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்கள்உடனிருந்தனர்.