/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலுவை வாடகையை வட்டியுடன் செலுத்த மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுரை
/
நிலுவை வாடகையை வட்டியுடன் செலுத்த மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுரை
நிலுவை வாடகையை வட்டியுடன் செலுத்த மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுரை
நிலுவை வாடகையை வட்டியுடன் செலுத்த மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுரை
ADDED : அக் 21, 2024 03:46 AM
கோவை: உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் வியாபாரிகள், நிலுவை வாடகையை வட்டியுடன் செலுத்த, மாநகராட்சியில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்கடம் - செல்வபுரம் ரோட்டில், சி.எம்.சி., காலனி பேஸ்-2 திட்டத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 520 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இதற்கு இன்னொரு 'பிளாக்' கட்டுவதற்கு, அருகாமையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட்டை இடித்து தர வேணடும்.
இதற்காக, உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது. மீன் வியாபாரிகள் இணைந்து, 72 கடைகளுடன் மார்க்கெட் கட்டியிருக்கின்றனர். அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமெனில், மாநகராட்சியில் தடையின்மை சான்று பெற வேண்டும். பழைய மார்க்கெட்டில் கடை நடத்தியவர்கள், 3.5 கோடி ரூபாய் வாடகை நிலுவை வைத்திருப்பதால், தடையின்மை சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதேநேரம், 222 வீடுகளுடன் இன்னொரு 'பிளாக்' கட்ட முடியாமல் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தவிப்புக்கு உள்ளாகியுள்ளது. வாரியம் தரப்பில் கொடுக்கும் நெருக்கடிக்கு கட்டுப்பட்டு, பழைய மார்ககெட்டை அவசரப்பட்டு இடித்து விட்டால், 3.5 கோடி ரூபாய் நிலுவை வாடகை வசூலிக்க முடியாத சூழல் ஏற்படும். ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநகராட்சி நிர்வாகம், வாடகை வசூலிக்காமல் இருந்தால், தணிக்கைத்துறை ஆட்சேபணையில் சிக்க நேரிடும்; அத்தகைய இழப்புக்கு தற்போதைய அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டிய சிக்கல் ஏற்படும். இதனால், மாநகராட்சி தரப்பில் இருந்து நிலுவை வாடகை வசூலிப்பதில் முனைப்பு காட்டப்படுகிறது.
இதுதொடர்பாக, மாநகராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மீன் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் தரப்பில், தற்போது வியாபாரம் செய்து வரும், 51 கடை வியாபாரிகள், தங்களது நிலுவை வாடகையை வட்டியுடன் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்பின், தமிழக அரசிடம் அனுமதி பெற்று, புதிய மீன் மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.