/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்காச்சோள மகசூல் அதிகரிக்க அறிவுரை
/
மக்காச்சோள மகசூல் அதிகரிக்க அறிவுரை
ADDED : ஜன 13, 2026 06:24 AM
-- நமது நிருபர் -:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இறுதியாண்டு படிக்கும் வேளாண் மாணவர்கள், பொங்கலுார், காட்டூர் கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு சென்று, விவசாயிகளிடம் செயல் விளக்கப்பயிற்சி வழங்கினர்.
மேலும், விவசாயிகளின் அனுபவங்களையும் கேட்டு, தங்கள் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொண்டனர். மாணவர்கள் மவுலி பிரசாத், முகுந்தன், முரளிதரன், முத்துப்பாண்டி, முத்துகுமார், நவீன்குமார், நரேன் ரேவந்த், ராகுல் சஜித் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் இக்களப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
'வளர்ச்சி ஊக்கி பயன்படுத்துவதன் வாயிலாக, மக்காச்சோள பயிரில், 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெற முடியும்' என அவர்கள் கூறினர். பொங்கலுார் வேளாண்மை பயிற்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், வேளாண் விஞ்ஞானி ஆனந்த்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

