/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வு; உள்ளாட்சிகளுக்கு அறிவுரை
/
வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வு; உள்ளாட்சிகளுக்கு அறிவுரை
வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வு; உள்ளாட்சிகளுக்கு அறிவுரை
வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வு; உள்ளாட்சிகளுக்கு அறிவுரை
ADDED : ஜன 21, 2025 11:42 PM
பெ.நா.பாளையம்; வாக்காளர் தினத்தில், பொதுமக்கள் ஓட்டு போடுவதன் முக்கியத்துவத்தை உள்ளாட்சி நிர்வாகங்கள் எடுத்துக் கூற வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜன., 25ம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில், 'தேர்தல் நாளில் நிச்சயம் வாக்களிப்பேன்' என, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சுவரொட்டி மற்றும் பேனர்கள், உள்ளாட்சி நிர்வாகங்களின் சார்பில், அனைத்து பொது இடங்களிலும் வைக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாளில், நியாயமான முறையில் வாக்களித்தல், தபால் வாக்கு ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள், மனிதசங்கிலி மற்றும் பேரணிகள் நடத்த வேண்டும். இது தவிர, குடியரசு தினத்தை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளில் வாக்குப்பதிவின் அவசியத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.