/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாயில் தண்ணீர் திறக்க ஆலோசனை
/
கால்வாயில் தண்ணீர் திறக்க ஆலோசனை
ADDED : ஜூலை 28, 2025 09:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; வடசித்துார் செட்டியக்காபாளையம், பி.ஏ.பி., கிளை கால்வாயில் நீர் திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வடசித்தூர் செட்டியக்காபாளையம் கிளை கால்வாயில் தண்ணீர் திறப்பது குறித்து, ஆண்டிபாளையம் சமுதாய நலக்கூடத்தில், செட்டியக்காபாளையம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் நல்லதம்பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சக்திகுமார் வரவேற்றார். கிளை கால்வாயில் தண்ணீர் வரும்போது, விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இரவு நேரத்தில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.