/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எண்ணெய் பண்டங்கள் குறைக்க பெற்றோருக்கு அறிவுரை
/
எண்ணெய் பண்டங்கள் குறைக்க பெற்றோருக்கு அறிவுரை
ADDED : ஆக 27, 2025 10:34 PM
கோவை; குழந்தைகளிடம் ஆரோக்கியமான உணவுபழக்க முறையை உருவாக்கும் நோக்கில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், 'எண்ணெய் இல்லா பண்டங்கள்' என்ற தலைப்பில், வாரத்தில் இரண்டு நாட்கள் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வழங்கும்படி, பெற்றோர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர் சகுந்தலா கூறுகையில்,“எண்ணெயில் பொறித்த துரித உணவுகளால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'எண்ணெய் இல்லா பண்டங்கள்' என்ற தலைப்பில், திங்கள் மற்றும் புதன்கிழமைகளில், அவல், முளைகட்டிய பயறு வகைகள், பழங்கள், பச்சை காய்கறி சேலட் போன்றவற்றை குழந்தைகளுக்கு வழங்கும்படி பெற்றோர்களிடம் கேட்டுள்ளோம்.
அதோடு, மாணவர்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில், களிமண்ணால் அவர்கள் தயாரிக்கும் உருவங்களில் செடிவிதைகளை உள்ளே வைத்து, பந்து அல்லது பிற வடிவங்களில் செய்து, மரம் நடுவதற்கு ஊக்குவித்து வருகிறோம்,”என்றார்.
மாணவர்களிடம் அதிகரித்து வரும் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சுகர் மற்றும் ஆயில் பண்டங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பலகைகளை வைக்க, மத்திய இடைநிலை கல்வி வாரியம் அண்மையில் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.