/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனிப்பொழிவில் இருந்து பயிரை காக்க ஆலோசனை
/
பனிப்பொழிவில் இருந்து பயிரை காக்க ஆலோசனை
ADDED : டிச 06, 2025 04:57 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் நிலவும் பனிப்பொழிவில் இருந்து பயிரை பாதுகாக்க, இயற்கை வேளாண்மை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில், ஆண்டு தோறும், 16 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமாக விவசாயம் நடக்கிறது. தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. அடுத்ததாக, தக்காளி சாகுபடியும், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் பல்வேறு ரக வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு காய்கறி பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மழை பொழிவுக்கு பின், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயத்துக்கு கைகொடுத்துள்ளது. தற்போது, பனிக்காலம் துவங்கியுள்ள நிலையில், விளை நிலத்தில் உள்ள பயிர்களின் பூக்கள் உதிர்வது அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதை கட்டுப்படுத்த இயற்கை விவசாயி சம்பத்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் கூறுகையில், பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிரும் போது, ஒரு லிட்டர் வேம் (ஒரு ஏக்கருக்கு) சொட்டு நீர் பாசனம் வாயிலாக கொடுக்கலாம்.
இதில், பயிர்களில் பூக்கள் அதிகமாக உதிரும் போது ஒரு லிட்டர் வேம் (ஒரு ஏக்கருக்கு) சொட்டு நீர் பாசனம் வாயிலாக கொடுக்கலாம்.
மேலும், கடலை புண்ணாக்கு கரைசல் (2 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்தது), 10 லிட்டரை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து வேரில் கொடுக்கலாம். 2 முதல் 5 லிட்டர் மீன் அமிலத்தை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம் அல்லது ஜீவாமிர்தம் 200 லிட்டரை சொட்டுநீரில் கலந்து கொடுக்கலாம். இவ்வாறு செய்தால் பயிர்களில் பூக்கள் உதிர்வதை தவிர்க்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

