தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாதை மாற்றிவிடும் போதை மாணவர்களுக்கு அறிவுரை

 பாதை மாற்றிவிடும் போதை மாணவர்களுக்கு அறிவுரை

 பாதை மாற்றிவிடும் போதை மாணவர்களுக்கு அறிவுரை


ADDED : பிப் 26, 2026 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 07:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: ''போதை பழக்கத்திலிருந்து மீள, நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும். விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர், ஆசிரியர்களுடன் கலந்துரையாட வேண்டும்,'' என, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரகுநாதன் பேசினார்.

பள்ளியில் நடத்தப்பட்ட போதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் இவர் பேசியதாவது:

உலகில் கொடூரமானது போதை பழக்கம். நம் முன்னேற்றம், கனவு, நல்ல நண்பர்கள், நம் உடலையும், குடும்பத்தையும் இழக்க வைக்கும். திடீர் கோபம், வருத்தம், பள்ளிக்கு தொடர்ந்து செல்லாமல் இருப்பது, எப்போதும் சோம்பேறித்தனமாக இருப்பது, மதிப்பெண் குறைவது, குடும்பப் பிரச்சனை, பொருளாதார இழப்பு, குற்றச்செயல்களில் ஈடுபடுவது, ஞாபக சக்தி குறைதல் போன்றவை போதைப் பழக்கத்தால் ஏற்படுகின்றன.

போதை பழக்கத்தின் அருகே கூட மாணவர்கள் செல்லக் கூடாது. எப்போதும் நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும். விளையாட்டில் ஆர்வம் மிக்கவராக, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

ரங்கநாதன் பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us